ராணுவ விருந்து நிகழ்ச்சியில் மகளுடன் வடகொரிய அதிபர் காட்சியளித்த புகைப்படம் தற்போத சமுக வளைத்தலங்களில் வைரலாகி வருகிறது.வடகொரிய அதிபர் கிம்முக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் என மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர் என நம்பப்படுகிறது. இந்த நிலையில், வடகொரியாவில் கொரிய மக்கள் ராணுவம் என்ற பெயரிலான அந்நாட்டு ராணுவ பிரிவு தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை கொண்டாடும் வகையில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, அதிபர் கிம் ஜாங் அன் தனது மகளுடன் வருகை தந்து உள்ளார். அவர் கிம்மின் 2-வது மகளான கிம் ஜூ யே என கூறப்படுகிறது. கருப்பு நிற உடையில், மூத்த ராணுவ உயரதிகாரிகள் சூழ்ந்து இருக்க தனது தந்தைக்கு அருகே மகள் ஜூ விருந்து நிகழ்ச்சியில் அமர்ந்து உள்ளார். ராணுவ அதிகாரிகளுடன் கைகுலுக்கிய புகைப்படங்களும் வெளிவந்து உள்ளன.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More