உத்தராகண்டைச் சேர்ந்த சிவில் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு ஒன்று, இந்து அமைப்பு அழைப்பு விடுத்துள்ள மகாபஞ்சாயத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்து. அதோடு;, அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா அடங்கிய விடுமுறைக்கால பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “இது ஒரு நிர்வாக பிரச்சினை. சட்டம் – ஒழுங்கை நிர்வாகம்தான் கையாளுகிறது. முதலில் நீங்கள் உயர் நீதிமன்றத்தை நாடுங்கள் என்று கூறி, மகாபஞ்சாயத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More