அதிக விலையுயர்ந்த ரயில் சேவையை ‘மகாராஜா எக்ஸ்பிரஸ்’ மூலம் இந்தியன் ரயில்வே வழங்கி வருகிறது. இதில் பயணிக்க விரும்பும் பயணிகள் ஏதேனும் நான்கு வழித்தடங்களை தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால் டிக்கெட் விலைதான் வியப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
நம்மில் பலர் ரயில்களில் பயணித்திருப்போம். இன்றும் அன்றாட வாழ்வில் பலர் ரயில் போக்குவரத்தை நம்பியுள்ளனர். பேருந்து, டாக்ஸி, விமானம் என மற்ற அனைத்து வகையான போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்தில் டிக்கெட் விலை மிகவும் குறைவு என்பதே பலர், பலர் அதனைப் பயன்படுத்தக் காரணம்.
ஆனால், ரயில் பயணம் மற்ற விலையுயர்ந்த மற்ற பயணங்களுக்கு குறைந்ததல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் உள்ளது மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் பயணம். இந்த ரயிலில் பயணிப்பதற்கு நபர் ஒருவருக்கு 19 லட்சம் ரூபாய் டிக்கெட்டுக்காக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், இளைஞர் ஒருவர் 19 லட்சம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி ‘மகாராஜா எக்ஸ்பிரஸ்’ரயிலில் பயணம் செய்த விடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More