Mnadu News

மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருப்பதி திருமலையில். சுவாமி தரிசனம் செய்தார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கர்நாடக தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் கர்நாடகத்தில் பிரச்சாரம் செய்ததால்தான் வெற்றி பெற்றோம் என்று காங்கிரஸார் கூறியிருப்பது,”காக்கை உட்கார பனங்காய் விழுந்ததாக தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள்.அது போலவே உள்ளது.அடுத்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் நடைபெறவுள்ள தேர்தல்களில் வென்று இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும். அதுமட்டுமல்ல, இதே கர்நாடகாவில் 28 எம்பிக்களில் 25 எம்பிக்கள் உள்ளனர். 28-க்கு 28 எம்பிக்கள் பாஜகவிலிருந்து 2024- ஆம் ஆண்டு வரத்தான் போகின்றனர். இது ராகுல் காந்தியின் கண் முன்னாலேயே நடக்கும்” என்று கூறி உள்ளார்.

Share this post with your friends