மயிலாடுதுறையில் ரூ.114.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய மாவட்டத்தை அறிவிப்பதை விட, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே முக்கியம். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மயிலாடுதுறை மாவட்டத்தை அறிவித்து ஒன்றரை ஆண்டுக்குள் ஆட்சியர் அலுவலகம் கட்டியுள்ளோம் என்றும் பெருமிதம் கொண்டார்.
மேலும் மயிலாடுதுறையில் ரூ.30 கோடி செலவில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 3 மாவட்ட கல்லூரிகளிக்கு 1,642 கணினிகள் வழங்கப்படும். மயிலாடுதுறையில் ரூ.5 கோடியில் புதிய நூலகம் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை கூறிய முதலமைச்சர், தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வர தொடங்கியுள்ளார், தமிழக மழை வெள்ளத்திற்கு 1 ரூபாய் கூட தராதவர்களை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். திராவிட மாடல் அரசு பக்கம் தான் மக்கள் எப்போதும் துணை நிற்பார்கள் இவ்வாறு அவர் கூறினார்.