Mnadu News

மக்களுடன் இணைந்து பாடுபடும் பா.ஜ.கவினர்: பிரதமர் மோடி பெருமிதம்.

மத்திய பிரதேசத்தில், 5 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்து பா.ஜ.க, தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ள பிரதமர் மோடி,இரண்டு வந்தே பாரத் ரயில்களை பெற்ற மத்திய பிரதேச மாநிலத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். போபால் முதல் ஜபல்பூர் வரையிலான பயண நேரம் இனி குறையும். வந்தே பாரத் ரயில் மூலம் மாநிலத்தில் ரயில் போக்குவரத்து மேம்படும்.பா.ஜ.க,வை உலகின் மிகப்பெரிய கட்சியாக மாற்றியதில் மத்திய பிரதேச மாநிலத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தொண்டர்கள் தான், பா.ஜ.க,வின் பெரிய பலமாக உள்ளனர். நாம் ஏசி அறையில் இருந்து உத்தரவு பிறப்பிப்பவர்கள் அல்ல. மோசமான வானிலையிலும் மக்களுடன் இணைந்து பாடுபடுபவர்களாக உள்ளனர்.நான் அமெரிக்கா மற்றும் எகிப்து சென்ற போது, உங்களின் கடின உழைப்பு குறித்து என்னிடம் கூறினர். தற்போது, உங்களை வந்து சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்று பேசி உள்ளார்.

Share this post with your friends