Mnadu News

மக்களை பாதுகாப்பதற்கு தி.மு.க. எதுவும் செய்யவில்லை; பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார். அந்த பதிவில், தமிழகத்தின் நலன்களை பாதுகாப்பதற்கு தி.மு.க. எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு பற்றிய புதிய விவரங்கள் வெளிப்பட்டு வருவதனால், முற்றிலும் இரட்டை நிலைப்பாட்டை கொண்ட தி.மு.க.வின் வேடம் கலைந்துள்ளது.

காங்கிரஸ் மற்றும் தி.மு.க. ஆகியவை குடும்ப கட்சிகள், அவர்களுடைய சொந்த மகன்கள் மற்றும் மகள்களின் வளர்ச்சியை பற்றியே அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். வேறு யாருக்காகவும் அவர்கள் கவலைப்படுவதில்லை. கச்சத்தீவில் அவர்கள் காட்டிய அலட்சியம் ஆனது, நம்முடைய ஏழை மீனவர்கள், குறிப்பிடும்படியாக மீனவ பெண்களின் நலன்களுக்கு தீங்கு ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இந்த விவகாரம் பெரிதும் தாக்கம் ஏற்படுத்தும் என பார்க்கப்படுகிறது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More