Mnadu News

மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்: ப.சிதம்பரம் கருத்து.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,கர்நாடக மாநில வாக்காளர்களுக்கு என் அன்பான, உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.,சட்டப்பேரவைத் தேர்தலில் மிகத் தெளிவான, ஆணித்தரமான தீர்ப்பைத் தந்த கர்நாடக மக்களுக்கு இந்த நாடே கடமைப்பட்டிருக்கிறது, நன்றி சொல்கிறது.கர்நாடக மக்கள் பாஜகவின் இரட்டை இஞ்சின் அரசாங்கத்தின் பணபலத்தையும் வலிமையையும் எதிர்கொண்டுள்ளனர். இனி நாட்டு மக்கள் விழித்துக் கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Share this post with your friends