Mnadu News

மங்களூரு-டெல்லி தினசரி விமானச் சேவை:இண்டிகோ ஏர்லைன்ஸ் தொடங்கியது.

இந்தியாவின் முக்கியமான விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ ஏர்லைன்ஸ் கடந்த 17 ஆண்டுகளாக விமானச் சேவையை மக்களுக்கு வழங்கிவருகின்றது. இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக மங்களூருவில் இருந்து டெல்லிக்கு தினசரி விமானச் சேவையை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி, விமானம் எண் 6இ 6303 புது டெல்லியிலிருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 6.05 மணிக்கு மங்களூரு சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடையும். விமானம் எண் 6இ 6304 மங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலை 6.35 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.35 மணிக்கு புது டெல்லி சென்றடையும்.

Share this post with your friends