Mnadu News

மங்கோலியாவில் புதிய வகை நோய் பரவல்! மக்கள் பீதி! 

புதிய நோய் பரவல்: 

மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய் என்கிற நோய் பரவல் வேகம் எடுத்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இது யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோய்யாகும். இது என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றால், இதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கவில்லையெனில் பாதிக்கப்பட்டவர் 24 மணி நேரத்துக்குள் மரணத்தை தழுவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

எங்கிருந்து பரவும்: இந்த வைரஸ் பொதுவாக கொறித்து உண்ணும் விலங்குகளிடம் காணப்படுவதால் அங்கு அணில் வகையை சேர்ந்த மர்மோஸ் என்ற விலங்குகளை வேட்டையாடுவது குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சட்ட விரோதமாக அதனை பலர் வேட்டையாடி உண்டு வருகின்றனர் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். 

பல மாகாணங்கள் பாதிப்பு: 

இந்த நிலையில் அங்கு பிளேக் நோய் அறிகுறியுடன் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தவகையில் அங்குள்ள 17 மாகாணங்கள் பிளேக் நோய் அபாயத்தில் உள்ளதாக நோய்களுக்கான தேசிய மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்தநிலையில் பிளேக் நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட கோவி-அல்டாய் என்ற மாகாணத்தை தனிமைப்படுத்தி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. 

Share this post with your friends