வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் பாலாற்று அருகே தனியார் நிலத்தில் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட நிலத்தின் உரிமையாளரின் மேலாளருக்கு மண்வெட்டியால் வெட்டியதில் படுகாயம் அடைந்தார். மேலும் மணல் கொள்ளையர்கள் இருவர் தப்பி ஓடினார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.