கர்நாடகா மாநிலம், கலபுரகி மாவட்டம், ஜேவராகி தாலுகாவில் உள்ள நாராயண்புரா கிராமத்தில் நெலோகி காவல் நிலையத்தைச் சேர்ந்த 51 வயதான தலைமைக் காவலர் மயுரா சவுகான் திருட்டு மணல் ஏற்றிச்சென்ற டிராக்டர் ஒன்றை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அப்போது வாகனத்தை நிறுத்தாத ஓட்டுநர், மயுரா மீது டிராக்டரை ஏற்றியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.இச்சம்பவம் தொடர்பாக புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், டிராக்டர் ஓட்டுநர் சித்தண்ணாவைக் கைது செய்துள்ளனர். இந்த சம்வம் தொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,”கலபுரகியில் தலைமைக் காவலர் ஒருவர் மணல் மாஃபியாவால் டிராக்டர் ஏற்றிக்கொல்லை செய்யப்பட்டிருக்கிறார்.கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதற்கு காங்கிரஸ் ஆட்சிக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More