Mnadu News

மணிப்பூரின் நிலைமை கவலை அளிக்கிறது: டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கேஜரிவால் வேதனை.

டெல்லி முதலமைச்சர் கேஜரிவால் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,மணிப்பூரின் நிலைமை கவலை அளிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இருதரப்பினருக்கும் இடையே நிகழ்ந்துவரும் வன்முறைக்கு இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை விதித்ததோடு, இணையத்தையும் தடை செய்துள்ளது. ,மணிப்பூரின் நிலைமை முழு நாட்டிற்கும் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. அங்கு அமைதியை மீட்டெடுக்க மத்திய அரசு பல முயற்சிகள் செய்ய வேண்டியது அவசியம் என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends