வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்டி சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.இதில் ஏராளமான வீடுகள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மாநிலத்தில் மீண்டும் இயல்புநிலையை ஏற்படுத்தும் வகையில் அமைதிக் குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது.இந்நிலையில்,மணிப்பூரில் பேசியுள்ள மெய்டி சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நிங்கோம்பா,ஆயுத குழுக்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை அரசு ‘வாபஸ்’ பெற வேண்டும்.மணிப்பூரில் போதை பொருள் கடத்தல், சட்டவிரோத குடியேற்றம் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வரை, வன்முறை நீடிக்கத் தான் செய்யும்.,எங்களுடன் கலந்து ஆலோசிக்காமலேயே, எங்கள் அமைப்பின் தலைவரை அமைதிக்குழுவில் உறுப்பினராக சேர்த்துள்ளனர். இதை நாங்கள் ஏற்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார். இதே காரணத்தைக் கூறி, கூகி சமூகத்தினரும் அமைதிக் குழுவை ஏற்கனவே புறக்கணித்து விட்டனர்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More