Mnadu News

மணிப்பூரில் குழப்பமான சூழலே நீடிக்கிறது: முதல அமைச்சர் பிரேன் சிங் தகவல்.

மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிப்பத்தற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடந்ததற்கு அதையடுத்து. மணிப்பூர் முதல் அமைச்சர்; பிரேன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பிரேன் சிங், “புறநகர்களில் நடக்கும் துப்பாக்கிச்சூடு முதல் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்து வரும் கலவரங்கள் வரை வன்முறையின் தன்மை மாறி வருவது அமித் ஷாவை கவலை கொள்ளச் செய்திருக்கிறது.மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன்சிங், மாநில அமைச்சர் சுசிந்ரோ மைத்தி வீடுகள் மீதான தாக்குதல், தொடர்ந்து நடைபெறும் தீவைப்பு மற்றும் பொதுச் சொத்துகளை அழிக்கும் சம்பவங்கள், பாதுகாப்பு படையினரின் நடமாட்டத்துக்கான இடையூறு போன்றவை குறித்து உள்துறை அமைச்சர் கேட்டறிந்தார்.வன்முறையின் தொடக்கம் அரசியல், உணர்வு நிறைந்ததாகவும் இருந்தது. ஆனால், தற்போது என்ன நடக்கிறது என்று கூற முடியாத அளவுக்கு நிலைமை குழப்பமாக உள்ளது. மாநிலத்தில் அமைதி நிலைநாட்டவும், இயல்பு நிலை திரும்பவும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை உள்துறை அமைச்சரிடம் நான் அளித்துள்ளேன் என்று கூறி உள்ளார்.

Share this post with your friends