Mnadu News

மணிப்பூரில் தீவிரமடையும் வன்முறை: பெண் அமைச்சர் வீட்டிற்கு தீ வைப்பு.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.இதில் ஏராளமான வீடுகள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கடந்த ஒரு மாதமாக இங்கு வன்முறை தொடர்கிறது.இந்நிலையில் இம்பால் மேற்கு மாவட்டத்தில் சாம்பெல் பகுதியில் அமைந்துள்ள குகி சமூக பெண் அமைச்சர் நேம்சா கிப்ஜெனின் வீட்டுக்கு அடையாளம் தெரியாத கும்பல் தீ வைத்தனர். இந்த சம்பவத்தின் போது அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லை. வீட்டுக்கு தீ வைத்த கும்பலை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

Share this post with your friends