Mnadu News

மணிப்பூரில் மீண்டும் கலவரம் -11 பேர் உயிரிழப்பு: விடுப்பில் இருக்கும் போலீசாருக்கு அழைப்பு.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சட்டவிரோதமாக ஆயுதங்களை எடுத்து சென்றவர்களிடம் இருந்து ஆயுதங்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமன்லோக் என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 11 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.காயமடைந்த பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கபட்டு உள்ளது. விடுமுறையில் சென்ற போலீசாருக்கு மீண்டும் பணியில் சேர அவசர அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

Share this post with your friends