Mnadu News

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: போலீஸ் ஆயுத கிடங்கிற்கு தீ வைத்தவர்கள் விரட்டியடிப்பு.

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் போலீசாரின் ஆயுதக்கிடங்கிற்கும் தீவைத்தவர்களை ராணுவத்தினர் விரட்டியடித்தனர். மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர் மற்றும் போலீசார் இணைந்து தலைநகர் இம்பாலில் கொடி அணிவகுப்பு நடத்தி உள்ளனர்.இந்த சூழலில்,மணிப்பூர் பல்கலை பகுதியிலும் 300க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி, எம்.எல்.ஏ., அலுவலகத்தை சூறையாட முயன்றனர். அங்கிருந்த பாதுகாப்பு படையினர் அவர்களை விரட்டினர்.அதே போல்,இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசனின் ஆயுத கிடங்கிற்கு மற்றொரு கும்பல் தீவைத்து ஆயுதங்களை கொள்ளையடிக்க முயன்றது. அவர்களையும் பாதுகாப்பு படையினர் விரட்டியடித்தனர்.அதோடு, பா.ஜக., அலுவலகத்தையும் தாக்கும் முயற்சியில் ஈடுபட்ட கும்பலை ராணுவ வீரர்கள் விரட்டியுள்ளனர். பா.ஜ.க, தலைவர் வீட்டையும் சூறையாட முயன்ற கும்பலையும் பாதுகாப்பு படையினர் தடுத்துள்ளனர்.

Share this post with your friends