Mnadu News

மணிப்பூரில் ராணுவத்தினர் மீது வன்முறையாளர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு: தீவிரமடையும் மோதல்.

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேல்,; பதற்றமான நிலை நீடித்து வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரது வீடுகள் தீக்கிரையாகி வருகின்றன. மணிப்பூரின் பல்வேறு இடங்களில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. வன்முறை சம்பவங்களால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.பதற்றம் நீடித்து வரும் மணிப்பூரில் துணை ராணுவத்தினர் மீது வன்முறையாளர்கள் திடீர் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் காயமடைந்த ராணுவ வீரர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதோடு, 5 வீடுகளுக்கு தீ வைத்து எரித்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.

Share this post with your friends