கடந்த மே மாதம் தொடங்கியதிலிருந்தே மணிப்பூர் மாநிலம் வன்முறை பூமியாகப் பற்றி எரிகிறது. காரணம் மேதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையேயான மோதல். இதில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் களமிறங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் இரண்டு மாதங்களாகப் பற்றி எரிகிறது. இந்த இனக் கலவரத்தில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.இந்தச் சூழலில் முதல் அமைச்சர்; என்.பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசிடமிருந்து வந்த அழுத்தத்தின் பேரில் பைரன் சிங் பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிகிறது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More