Mnadu News

மணிப்பூரில் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல் அமைச்சர்; பைரேன் சிங் தலைமையில் பா.ஜ.க, ஆட்சி நடக்கிறது. இங்கு, மெய்டி – கூகி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மாநிலம் முழுதும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.இந்த சூழலில்,கிளர்ச்சியாளர்கள் குழு பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 12 பேரை கைது செய்த பாதுகாப்புப் படையினர், அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.இந்நிலையில் மணிப்பூரில் தமனே்லாங், கிழக்கு இம்பால், பிஷ்னுபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பதுங்கு குழிகள் இருப்பதாக வந்த ரகசிய தகவலின் படி, பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து நடத்திய சோதனையில் 12 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன.

Share this post with your friends