மணிப்பூரில், மெய்தி இன சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே நிலவி வரும் மோதலால், கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, மணிப்பூரில் காணப்படும் அமைதியற்ற சூழலை அடுத்து, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து கல்லூரிகளும் இன்றும், நாளையும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.