மணிப்பூரில் 53 சதவீத மக்கள் தொகை கொண்ட மேதே சமூகத்தினர் பழங்குடியினர் அந்தஸ்து கோருவதற்கு எதிராக நடைபெற்ற பேரணியை தொடர்ந்து, மாநிலத்தின் 10 மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. கலவரம் மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் நாசமாகின. நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர்; என் பிரேன் சிங்கின் கூற்றுப்படி, வன்முறையில் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 231 பேர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் ஆயிரத்து 700 வீடுகள் தீக்கிறையாகி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More