Mnadu News

மணிப்பூர் மாநிலத்தில் நீட் தேர்வு ஒத்தி வைப்பு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

டெல்லியில் பேசியுள்ள மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்;,தொடர் வன்முறை காரணமாக மணிப்பூரில், தற்போதைய சூழ்நிலையில், பிராட்பேண்ட் மற்றும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது,எனவே, நீட் தேர்வை மறு அட்டவணை செய்யவோ அல்லது ஒத்திவைக்குமாறு தேசிய தேர்வு முகமையை கேட்டுக் கொண்டேன். இதையடுத்து, மணிப்பூர் மாநிலத்தில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவது குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை அனுப்பியுள்ளது என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More