மணிப்பூர் கலவரம் தொடர்பாக தொடர்ந்து அதிகாரிகளிடமும், மாநில அமைச்சர்களிடமும் ஆலோசனை நடத்தி வரும் மத்திய அமைச்சர் அமித் ஷா, அந்த மாநிலத்தில் இயல்புநிலை திரும்ப, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிவுறுத்தி வருகிறார்.அதன் காரணமாக,கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறவிருந்த தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்ட அமித் ஷா, வடகிழக்கு மாநில முதல் அமைச்சர்;களை காணொலி காட்சி வாயிலாக சந்தித்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு நேரடியாக அறிவுறுத்தியிருக்கிறார்.அதே நேரம், மணிப்பூர் முதல் அமைச்சர் என். பைரன் சிங் மற்றும் உயர் அதிகாரிகளிடமும் கலந்தாலோசனை நடத்தி எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More