மண்பானை தண்ணீர் :
காலம் காலமாக மண்பானையில் தண்ணீர் அருந்துவது என்பது ஒரு மரபாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இன்று காலம் மாறி விட்ட சூழலில் அந்த பழக்கங்கள் தொலைந்து வருகின்றன.
மண் பானையில் தண்ணீர் சேமித்து வைத்துக் குடிக்கும் பழக்கம் மிகச் சிறந்த ஆரோக்கியப் பழக்கமாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதுவும் இந்த கோடை காலத்தில் வெய்யிலை மற்றும் வெப்பத்தை சமாளிக்க, நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்ள உடல் நல ஆலோசகர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
மண் பானை நீர் பயன்கள் :
மண் பானையில் நீர் அருந்துவதால் மெட்டபாலிசத்தை தூண்டி அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். அதில் இருக்கும் மினரல்கள் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
கோடை கால நோய்கள் வெயில் காரணமாக சில தொற்றிக்கொள்ளும். இதைத்தடுக்க மண் பானை நீர் தான் சிறந்த இயற்கை மருந்து. கனிமச் சத்துகள் நிறைந்த பானை நீர் உடலுக்கு பல நோய் எதிர்ப்பு சக்திகளை அளிப்பது மட்டுமன்றி தீராத தாகத்தையும் ஒரு கிளாஸ் நீரில் தீர்த்துவிடும்.
பிரிட்ஜில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரை அருந்தும் போது சில பின்விளைவுகள் ஏற்படும். மண் பானை நீர் எந்த பின் விளைவுகளையும் தராது.
குறிப்பாக தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், இருமல், சளி, ஆஸ்துமா, தொண்டை புண் போன்ற பிரச்னைகளுக்கு பானை நீர் சிறந்த தேர்வு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே, இயற்கை மருந்தான மண் பானை தண்ணீர் பருக அனைவரும் துவங்குவோம் உடலை டீஹைட்ரட் ஆகமால் பார்த்து கொள்வோம்.