Mnadu News

மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு : ஜாமியா பல்கலைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.

மத்திய பல்கலையான ஜாமியா மிலியா இஸ்லாமியா புதுடெல்லியில் அமைந்துள்ளது. இங்கு, ஆசிரியர் அல்லாத 241 பணியிடங்களை நிரப்புவதற்காக சமீபத்தில் விளம்பரம் செய்யப்பட்டது. இதில், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீடு முறை கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, எஸ்.சி., பிரிவைச் சேர்ந்த ராம் நிவாஸ் சிங், எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த சஞ்சய் குமார் மீனா ஆகியோர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில, ,பணியிடங்களை நிரப்புவதற்கு எந்த தடையும் இல்லை. அதே நேரத்தில், மனுதாரர்கள் விண்ணப்பித்துள்ள பதவிக்கான பணியிடங்களில், இரண்டு பிரிவுக்கும் தலா ஒரு இடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும்.இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணை, ஜூலை 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More