உத்தர பிரதேசத்தில் மதரசா எனப்படும் இஸ்லாமிய மதக் கல்வியை போதிக்கும் நிறுவனங்களுக்கு, மாநில அரசு நிதி உதவி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் உத்தர பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் லக்னோ கிளை சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில்,இந்த வழக்கில், குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும்.இதில், ஒரு சமூகத்தினருக்கு மட்டும் அரசு சார்பில் நிதியுதவி அளிப்பது என்பது, அரசியல் சாசனம் அளித்துள்ள சம உரிமைக்கு எதிரானது. அதனால், மதரசாக்களுக்கு நிதியுதவி அளிப்பதை உடனடியாக நிறுத்த மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More