டெல்லியில் முதல் அமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-22-ஆம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியினர் 100 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கின் இரண்டாவது துணை குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா பெயரை அமலாக்கத்துறை இணைத்துள்ளது. சிபிஐ முதல் முறையாக மணீஷ் சிசோடியாவை குற்றவாளி எனக்கூறி டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சில நாட்கள் கழித்து அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More