Mnadu News

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் என் பெயர் சேர்ப்பா?: மறுத்த ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா பெயரை அமலாக்கத்துறை இணைத்துள்ளது என்று செய்தி வெளியானது. இதையடுத்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா, இச் செய்தியானது, இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும்.அமலக்கத்துறையின் எந்த நடவடிக்கையிலும் நான் குற்றம் சாட்டப்பட்டவராகவோ அல்லது சந்தேகத்திற்குரியவராகவோ அல்லது சாட்சியாகவோ சேர்க்கப்படவில்லை.இது எனது நற்பெயரையும் நம்பகத்தன்மையையும் கெடுக்கும் பிரச்சாரம் ஆகும் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More