புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல் அமைச்சராகவும், கலால் துறை அமைச்சராகவும் பதவி வகித்த மணீஷ் சிசோடியா உட்பட 12க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம் சி.பி.ஐ., பல மணி நேரம் விசாரணை நடத்தியது. அதேபோல் டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரித்தது. இந்நிலையில்,இந்த வழக்கில், மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், பாரத ராஷ்டிர சமிதியின் மூத்த தலைவர் கவிதாவின் ஆடிட்டர் புட்சி பாபு, அர்ஜுன் பாண்டே மற்றும் அமந்தீப் தால் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More