மதுரவாயல் உலக சுற்றுலா தலமாக மாறும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே உள்ள நெற்குன்றத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொமண்டு உரையாற்றிய மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் , 2007 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி மதுரவாயல் முதல் துறைமுகம் வரை பறக்கும் மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை தொடங்கினார். அதிமுக ஆட்சியில் தொடரபடமால் இருந்து வந்த நிலயில் தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் ஈரெடுக்கு பாலம் கட்டப்பட்டு வருகிறது என்று பெருமிதம் கொண்டார். மேலும் உலக மக்கள் அனைவரும் 15 கிலோமீட்டர் நீளமுள்ள ஈரடுக்கு பாலத்தை வந்து சுற்றி பார்த்துவிட்டு செல்வார்கள்” இதனால் மதுரவாயல் உலக சுற்றுலா தலமாக மாறும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்