மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ள நஞ்சுண்டலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் ஒருவர் தூக்கிட்டு சடலமாக கிடந்துள்ளார். தகவலின் அடைப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அவனியாபுரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்தவர் அவனியாபுரம் பெரியசாமி நகரை சேர்ந்த 68 வயது மதிக்கத்தக்க நாராயணன் என்பது தெரியவந்தது. மேலும் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் இதனால் வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக குடும்பத்தினர் திட்டியதால் தற்கொலை செய்துகொண்டார் என்றும் தெரிய வந்துள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More