ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும், தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ஃரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மதுரையை சேர்ந்த வழக்குரைஞர் முகமது அப்பாஸ், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,என்ஐஏ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “வழக்குரைஞர் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் என்ஐஏ எச்சரிக்கையுடன் செயல்பட்டது. கடந்த மார்ச் மாதம், இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போதே முகமது அப்பாஸ{க்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்த போதும், கூடுதல் ஆதாரங்களுக்காக காத்திருந்து தற்போது வழக்கில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.வழககுரைஞர் முகமது அப்பாஸ் ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் இருப்பவரின் காவலை சட்டவிரோதம் எனக்கூற முடியாது. இந்த வழக்கு தொடர்பாக கேஸ் டைரியை நீதிமன்றம் ஆராயலாம்” என்று வாதிட்டார்.இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கேஸ் டைரி மற்றும் ஆடியோப் பதிவுகளை தயாராக வைத்திருக்கும்படி கூறி, வழக்கின் விசாரணையை ஜூன் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More