Mnadu News

மதுரை விமான நிலைய 24 மணி நேர சேவைக்கான திட்டம் நிறுத்திவைப்பு.

மதுரை விமான நிலையத்திற்கு தினமும் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் வரை வந்து செல்கின்றனர்.இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில்; 24 மணி நேர சேவை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்வு ஆகியன எப்போது செய்யப்படும்? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை ஒருவர் ஆடிஐயில் கேட்டிருந்தார். அதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் பதிலளித்துள்ளது.அதில்,மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்க பணிக்கு தேவையான 2 நீர்நிலை நிலப்பரப்பு இடங்களை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து, இன்னும் ஒப்படைக்கவில்லை. ஒப்படைத்த பின்னரே விமான ஓடுதள பணிகள் மேற்கொள்ளப்படும். மதுரை விமான நிலைய கட்டுப்பாட்டு மைய விரிவாக்க பணி இன்னும் திட்டம் வகுக்கப்படும் நிலையிலேயே உள்ளது. விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைக்கான திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஆணையம் பதிலளித்துள்ளது

Share this post with your friends

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...

Read More