Mnadu News

மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்கு.

சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அபதாரம் விதிக்கப்படும் புதிய போக்குவரத்து விதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மது அருந்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ருபாய் வரை அபராதம் வசூல் செய்யப்படும்.
ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் அவருடன் பயணிப்போருக்கும் அபராதம் விதிக்கப்படும்.அதே சமயம்,தனக்கு நன்கு பரிச்சியமான ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அவருடன் பயணிப்போருக்கும் அபராதம் விதிக்கப்படும். ஆனால் சவாரி செல்லும் போது இந்த விதி பொருந்தாது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More