Mnadu News

மது விற்பனை நேரத்தை ஏன் மாற்றக் கூடாது?: சென்னை உயர்நீதிமன்ற கிளை கேள்வி.

பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசால் உறுதியாக சொல்ல முடியுமா? 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதோடு, குறைவான நேரம் மது விற்றாலும் தமிழகமே மது விற்பனையில் முன்னிலையில் உள்ளது. மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணிவரை மாற்ற ஏன் பரிசீலனை செய்யக் கூடாது எனக் கேள்வி எழுப்பினர்.

Share this post with your friends