Mnadu News

மத்தியப்பிரதேச விபத்தில் 11 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு.

மத்தியப்பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் ஜல்லார் காவல் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை எஸ்.யு.வி. கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாகவும், விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக மாவட்ட எஸ்.பி. பெதுல் சிமலா பிரசாத் கூறியுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டில், மத்தியப்பிரதேசம் மாநிலம், பெதுலில் நடந்த கோர விபத்தில் 11 பேர் இறந்த தகவல் அறிந்து வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். விபத்தில் இறந்தவர்களின் குடுபத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்ச ரூபாயும்;, காயமடைந்தவர்களுக்கு தலா 50ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்க மோடி உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More