Mnadu News

மத்தியப் பிரதேசத்தில் ஆற்றில் டிரக் கவிழ்ந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு.

குவாலியரைச் சேர்ந்த சிலர் திருமண விழாவிற்காக திகம்கர் மாவட்டத்திலுள்ள ஜதராவிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தாதியா மாவட்டத்திலுள்ள புஹாரா கிராமத்திற்கு அருகே டிரக் சென்ற போது, டிரக் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 65 வயதுடைய ஒரு பெண் மற்றும் 4 குழந்தைகளும் உயிரிழந்தனர். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.என்று மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Share this post with your friends