பொது சிவில் சட்டம் அவசியம் என்று தெரிவித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜாபியத் உலமா-இ-ஹிந்த் ஆகிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து உள்ளன. இருப்பினும், ஆம் ஆத்மி கட்சி சட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து பேசியுள்ள ஆம் ஆத்மி எம்.பி.யும் பொதுசெயலாளருமான சந்தீப் பதக், “நாங்கள் ஒரே மாதிரியான சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறோம். 44 வது பிரிவு நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறது. ஆனால் இது அனைத்து மதங்களுடனும் தொடர்புடையது என்பதால், இந்த பிரச்சினையில் பெரிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அனைத்து மதத்தினரிடம் இருந்தும்,அரசியல் கட்சியினரிடம் இருந்தும் ஆலோசனைகளை பெறவேண்டும். ஒருமித்த கருத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாமல் அதை செயல்படுத்த முடியாது என்று கூறி உள்ளார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More