Mnadu News

மத்திய அரசின் வேலைவாய்ப்பு மேளா: சென்னையில் 646 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்.

ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு பணிகளில் புதிய வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஸ்கர் மேளா’ என்ற புதிய திட்டத்தின் மூலம் 6-வது கட்டமாக இந்தியா முழுவதும் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் 43 இடங்களில் நடைபெற்றது.அதன்படி, தமிழகத்தில் சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் நடந்த விழாவில் 884 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடந்த விழாவில் 646 பேருக்கு மத்திய அரசு அதிகாரிகள் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.இதையடுத்து, இவர்கள் தங்களுக்கான துறையில் வழக்கமான பணியில் ஈடுபடுவர்.

Share this post with your friends