கர்நாடகாவில் நியாய விலை கடைகளில் ஏற்கனவே 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. கர்நாடகா தேர்தலின் போது காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ‘அன்ன பாக்யா’ என்ற திட்டத்தின்கீழ் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், இத்திட்டத்தை அமல்படுத்த ஆயத்தமானது. இந்த நிலையில், வெளிச்சந்தை விற்பனை திட்ட கொள்கையின்படி, வழங்கப்பட்டு வந்த அரிசி, கோதுமை பொருட்களை, பருவமழை தாமதம் மற்றும் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், மாநிலங்களுக்கான விற்பனையை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது.இதனால் காங்கிரஸ் கட்சி, தன் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து வரும் 20ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக கர்நாடக துணை முதல் அமைச்சரும்;, மாநில காங்., தலைவருமான டி.கே.சிவகுமார் அறிவித்துள்ளார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More