Mnadu News

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல்

வெள்ள பாதிப்புகளுக்கு, இடைக்கால நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் கதிர் ஆனந்த் (வேலூர்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்) ஆகியோரை ஆதரித்து, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாமும் வெள்ள நிவாரணம் கேட்டுக்கேட்டு பார்த்தோம். தரவில்லை. நாளை காலை உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்போகிறோம்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

தென்மாவட்டங்கள் மற்றும் சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு, இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே வெள்ள நிவாரணம் கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More