மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில், கடந்த 2013 ஆம் ஆண்டு குப்பை கழிவுகளைக் கொட்டுவது தொடர்பாக தீர் சிங் தோமர் மற்றும் கஜேந்திர சிங் தோமர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது தீர் சிங் தோமரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் கிராமத்தை விட்டு வெளியேறினர்.பின்னர் நீதிமன்றத்தின் மூலமாக இரு குடும்பத்தினரும் சமரசம் செய்துகொண்ட நிலையில்,கிராமத்திற்கு திரும்பிய கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் மீது தீர் சிங் குடும்பத்தினர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.இதில் கஜேந்திர சிங் தோமர், அவரது இரண்டு மகன்கள் மற்றும் 3 பெண்கள் என 6 பேர் உயிரிழந்தனர். அத்துடன்,; 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More