சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் “நட்புடன் உங்களோடு மனநல சேவை” என்ற தொலைபேசி வழி மனநல சேவை திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,தொலைதூர மனநல ஆலோசனை மையம் 2 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு உள்ளது. மனநல ஆலோசனை பெற 14416 என்ற புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த எண்ணில் தொடர்புகொண்டு பேசுபவர்களுக்கு, மனநலம் ஆற்றுபடுத்தும் சேவைகள், மனநல ஆலோசர்களுடன் விடியோ ஆலோசனைகள், தொடர் சிகிச்சைக்கான வழிகாட்டுமுறைகள் வழங்கப்படும்.
ஏற்கனவே 104 சேவை தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டுருக்கிறது.
“நட்புடன் உங்களோடு மனநல சேவை” என்ற திட்டத்தில் 2 மனநல மருத்துவர்கள், 4 உளவியலாளர்கள், 20 ஆற்றுபடுத்துனர்கள் மனநல ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்கள் என்று கூறி உள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More