கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பெரும்பாலானோர் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனர். உறவினர்களால் கைவிடப்பட்ட சிலர் அங்கேயே தங்கி தொழிற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவ்வாறு மனநல காப்பகத்தில் தங்கி தொழில்பயிற்சி மேற்கொண்டு வரும் சென்னையை சேர்ந்த 42 வயதான மகேந்திரனும் வேலூரைச் சேர்ந்த 36 வயதான தீபாவும் காதல்வசப்பட்டு இல்லற வாழ்வில் இணையராக கரம்கோர்க்க முடிவு செய்தனர். அதையடுத்து,
காப்பக நிர்வாகம் சார்பில் மகேந்திரன்-தீபா காதல் ஜோடிகள் திருமணம் கீழ்ப்பாக்கம் மனநல காப்பக நுழைவாயில் எதிரே உள்ள, சித்தி புத்தி விநாயகர் கோயிலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்து கொடுக்க, மகேந்திரன், தீபாவுக்கு தாலி கட்டினார்.அதைத் தொடர்ந்து,திருமண பரிசாக மணமக்களுக்கு அந்த மருத்துவமனையிலேயே பணியாற்றிட பணி ஆணைகள் வழங்கப்பட்டது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More