Mnadu News

மன்னிப்பு கேட்க முடியாது: தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமிக்கு அண்ணாமலை பதில்.

தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை, கடந்த மாதம், 14ஆம் தேதி, தி.மு.க., தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அவர்கள் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்திருப்பதாக தெரிவித்தார்.அதற்கு மறுப்பு தெரிவித்து, தி.மு.க., சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் உதயநிதி, கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் சார்பில், அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை சார்பில், வழக்குரைஞர் வழியே பதில் அனுப்பப்பட்டது.அதேபோல், தி.மு.க., – எம்.பி., கலாநிதி வீராசாமி சார்பில், வழக்குரைஞர் வில்சன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு அண்ணாமலை சார்பில், வழக்குரைஞர் பால் கனகராஜ், பதில் அனுப்பி உள்ளார்.அதில்,அண்ணாமலை கூறிய நிறுவனங்களில், கலாநிதி வீரசாமி குடும்பத்தினருக்கு பங்கு உள்ளது. இதை, அவர் மறுக்கவில்லை.அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி சொத்துக்கள் சேர்க்கப்பட்டதாக, அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. எனவே, மன்னிப்பு கேட்க முடியாது. நீங்கள் எந்த நடவடிக்கை எடுத்தாலும், சந்திக்க தயாராக உள்ளோம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends