Mnadu News

மன்னிப்பு கேட்க முடியாது: கனிமொழிக்கு அண்ணாமலை ‘நோட்டீஸ்’.

அவதூறு வீடியோ வெளியிட்டதற்காக, ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, தி.மு.க., – எம்.பி., கனிமொழி சார்பில், அண்ணாமலைக்கு, வக்கீல் ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. வழக்குரைஞர் மனுராஜ் அனுப்பியுள்ள நோட்டீசில், கனிமொழிக்கு தனிப்பட்ட முறையிலும், பொது வாழ்வில் அவர் வைத்திருந்த மதிப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். கனிமொழியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்று; கூறப்பட்டு இருந்தது. ,இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழிக்கு, தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அதில், கனிமொழியின் சொத்து விவரங்களை வெளியிட்ட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் எனவும், சட்ட நடவடிக்கையினால் அண்ணாமலை குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது எனவும்; குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this post with your friends