Mnadu News

மயிலாடுதுறையில் சிறுத்தையை தேடும் பணி தீவிரம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் நேற்று முன் தினம் வெளியாகின. இதையடுத்து, சிறுத்தையை பிடிக்க போலீசார், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் களமிறங்கியுள்ள நிலையில், 3வது நாளாக சிறுத்தையை பிடிக்கும் பணி நீடித்து வருகிறது.

அதேவேளை, சிறுத்தை நடமாட்டம் காரணமாக மாணவ-மாணவியர் நலன்கருதி செம்மங்குளம், ஆரோக்கியபுரம் பகுதிகளில் செயல்படும் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய காரணமின்றி வீட்டை விட்டு வெளியே பொதுமக்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தை தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More