சென்னையில்,செய்தியாள்களிடம் பேசியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஊழல் செய்வதற்காக, திமுகவினரால் 2006 முதல் 2011 வரை ஆட்சி காலத்தில் அதிகமான தனியார் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டன. நீட் தேர்வுக்கு முன், மருத்துவ கல்லூரிகள் கவுன்சிலில் ஊழல்கள் அதிகம் நடந்தன.நீட் தேர்வு வருவதற்கு முன் மருத்துவ சேர்க்கை முறைகேடு நிறைந்ததாக இருந்தது. மருத்துவக் கல்லூரியில் ஊழலை குறைக்கவே நீட் தேர்வு. ஏழை மாணவர்களும் பயன் பெற வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மருத்துவ கவுன்சில் குறித்து பேச திமுகவுக்கு எந்த வித அருகதையும் கிடையாது. ஆற்காடு வீராமியே தனியார் மருத்துவ கல்லூரிகள் குறித்து குறை கூறியிருக்கிறார்.அதோடு,தேசிய ஜனநாயக கூட்டணி, 39 சீட்டுகளில் வெற்றி பெற வேண்டும். குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.இது குறித்து வருகிற காலங்களில் தலைவர்கள் பேசுவார்கள்.இன்னும் காலங்கள் இருக்கிறது. 2024ஆம் ஆண்டு பிரதமர் மோடி வெற்றி பெற உள்ள 400 தொகுதிகளில் நாமும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More